மைத்திரிபாலவின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்திய தயாசிறி: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராக தயாசிறி ஜயசேகர நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளராக செயல்பட்ட தயாசிறி ஜயசேகரவின் பதவி நீக்கப்பட்டு கட்சி உறுப்புரிமையும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சி நேற்றைய தினம்(07.09.2023) அறிவித்திருந்தது.
நீதிமன்றில் வழக்கு தாக்கல்
இது தொடர்பான எழுத்து மூல கடிதம் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் தமக்கு கிடைக்கப் பெற்றதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கட்சியிலிருந்து நீக்க கட்சித் தலைவர் மேற்கொண்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் நேற்றைய தினம் திடீரென மூடப்பட்டதுடன் அதன் வாயில் கதவும் பூட்டுப் போட்டு மூடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளமை, கட்சிக்குள் அரசியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதை வெளிக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
