எரிவாயு கொள்கலன் வெடிப்பு தொடர்பில் தீர்மானங்கள் இன்றி முடிவடைந்த நாடாளுமன்ற ஆலோசனைக் கூட்டம்
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டு வரும் எரிவாயு கொள்கலன் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டப்பட்ட விசேட ஆலோசனைக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை.
இந்தக் கூட்டத்தில் அரசாங்க மற்றும் எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்
குறித்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வெடிப்புக்களுக்கான காரணங்களை கண்டறியவேண்டும் என்று இந்த கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள், கொள்கலன்களில் புரோப்பேன் மற்றும் பூட்டேன் கலவையானது, 50க்கு 50 ஆக இருப்பதன் காரணமாக ரெகுலேட்டர் மற்றும் இணைப்புக் குழாய் ஆகியவற்றில் கசிவு ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹா்ச டி சில்வா தொிவித்துள்ளார்.
இதேவேளை 50க்கு 50 புரோன்பேன் மற்றும் பூட்டேன் கலவைகளை கொண்டுள்ள கொள்கலன்களை சந்தையில் இருந்து திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எதிர்கட்சி கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ அலவத்துவல தொிவித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற பொலிஸ் அதிகாரிகள், எரிவாயு வெடிப்பு சம்பவங்களில் இதுவரை எவரும் உயிரிழக்கவில்லை. எனினும் 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam