பசிலின் டை கோர்ட் பிரதியே ரணில்! நாடாளுமன்றில் விமல்!
பசிலின் பிரதி ரணில்
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் டை கோர்ட் பிரதியே ரணில் விக்கிரமசிங்க என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க என்ற நிதியமைச்சரை காட்டிலும், பசில் ராஜபக்ச என்ற நிதியமைச்சர் சிறந்தவர் என்று விமல் வீரவன்ச கூறியதாக, ரணில் குறிப்பிட்டபோதே விமல் வீரவன்ச இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை வெளிநாடுகளில் பணியாற்றுவர்களிடம் இருந்து டொலர்களை நாட்டுக்கு கொண்டு வரவேண்டுமாயின் அவர்களின் நம்பிக்கையை வெற்றிக்கொள்ளவேண்டும்.
சஜித்,அனுர, அழகப்பெரும
இதற்காக சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க மற்றும் டளஸ் அழகப்பெரும உட்பட்ட 7 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களை இணைத்து நிதியம் ஒன்றை அமைக்கலாம்.
சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசாநாயக்க போன்றோர் அரசாங்கத்துக்குள் வர விரும்பாவிட்டாலும் இதனை போன்ற குழுவில் அவர்களை இணைக்கமுடியும்.
இதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து தமது வீடுகளுக்கு டொலர்களை அனுப்புவோரின் நம்பிக்கையை வெற்றிக்கொள்ளமுடியும்.
எனவே சர்வதேச நாணய நிதியத்தை மாத்திரம் நம்பியிருக்காமல், வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கையர்களை கொண்டு நாட்டுக்கு டொலர்களை கொண்டு வரமுடியும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்த விமல்! பகிரங்க சவால்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri