95 டொலர்களுக்கான எரிவாயுவில் மோசடியா..! ரணிலிடம் விளக்கம் கோரும் தயாசிறி!
எரிவாயுவில் மோசடியா?
95 அமெரிக்க டொலர்களுக்கு ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு கொள்வனவு செய்யப்பட்ட நிலையில், ஏன் அது 129 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டது என்பதை வெளிப்படுத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோரியுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இந்த கோரிக்கையை இன்று நாடாளுமன்றில் விடுத்தார்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளியில் சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டினார்.

225 பேர் மீதும் குற்றச்சாட்டு
225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பண மோசடி செய்துள்ளதாக சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு குற்றம் சுமத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் தொடர்புடையவர்கள் பிரதமரும் அமைச்சரவையும் என்பதால், பிரதமர் இது தொடர்பில் விளக்கமளிக்கவேண்டும் என்று தயாசிறி வலியுறுத்தினார்.

கோட்டாபயவுக்கு அதிகாரம் உண்டு! ஆனால் இதுதீர்வல்ல - பங்காளிக்கட்சி எடுத்துரைப்பு
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan