குற்றவாளிகளை விடுவித்த அலி சப்ரியே, நெருக்கடி நிலைக்கு பொறுப்பு! -ஐக்கிய மக்கள் சக்தி!
நாட்டில் .ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆரம்பித்த பொறுப்பை, நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி, ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவி்த்துள்ளது.
அவர் இன்று உண்மையை கூறுவதாக தம்மை நியாயப்படுத்துகின்றபோதும், அவரே முழுமை பொறுப்பாளி என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸா வித்தானகே, நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளை கொண்ட பலரை, தமது பதவியை பயன்படுத்தி விடுவித்ததன் மூலம், அலி சப்ரியே நாட்டின் இன்றைய நிலைக்கு காரணமாக அமைந்துள்ளதாக ஹேசா வித்தானகே குறிப்பிட்டார்.
இந்தநிலையில் கடந்த 9ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறை தொடர்பில், மகிந்த ராஜபக்சவிடமே, முதன்முறையாக வாக்குமூலம் பெறப்பட்டிருக்கவேண்டும்.
எனினும் அது மேற்கொள்ளப்படாமல் இருப்பது உண்மை கண்டறியப்படாது என்பதற்கான சமிஞ்சையாகும் என்றும் வித்தானகே குறிப்பிட்டார்.
இதேவேளை கோட்டாபய ராஜபக்ச, பதவி விலகிச் செல்லும் வரை, எந்த நாடும் இலங்கைக்கு டொலர்களை வழங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri