இலங்கையில் 13 பேருக்கு ஒரு அரச பணியாளர்! நாடாளுமன்றில் வெளியான தகவல்
இலங்கையின் இன்று 13 பேருக்கு ஒரு அரச சேவையாளர் பணியில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், 1948ஆம் ஆண்டில் 113 பேருக்கு ஒரு அரச சேவையாளர் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்.
இன்று 13 பேருக்கு ஒரு அரச பணியாளர், பணியில் அமர்த்தப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு அவர்களுக்கான நிதிகளை ஒதுக்கமுடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தற்போதைய நிலையில் எதிர்வரும் மாதங்கள் மிகவும் கடுமையான காலமாக இருக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதை, அலி சப்ரி உறுதிப்படுத்தினார்.
இந்தநிலையில் நாட்டில் இன்று மொத்த வருமானம் 1.4 ரில்லியன் ரூபாய்களாகும். எனினும் மொத்த செலவீனம் 3.4 ரில்லியன்கள் என்றும் அலி சப்ரி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை நாட்டின் அரசியல் கலாசாரம் தொடர்பில் தாம் கடுமையான அதிருப்தியை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam