நாடாளுமன்ற உணவகத்தை மூடிவிடும் கோரிக்கை! சபாநாயகர் விடுத்த அறிவிப்பு!
நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு நாடாளுமன்ற உணவகத்தை மூடிவிடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பொதுஜன பெரமுனவின் 53 பேர் உறுப்பினர்கள், கையொப்பங்களை இட்டு சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில் அதிக செலவுகளை கருத்திற்கொண்டு, நாடாளுமன்ற உணவகத்தை மூடிவிட்டு, தமக்கு பகல் உணவை பெற்றுத்தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் இன்று நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் கருத்து வெளியிட்ட, சபாநாயகர் இது தொடர்பில் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை மன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், எஸ்.எம்.மரிக்கார், நாடாளுமன்றத்தை கூட்டுவதன் காரணமாக அதிக செலவாகிறது என்று கூறப்படுவதை மறுத்தார்.
நாடாளுமன்றம் கூட்டப்பட்டாலும், கூட்டப்படாவிட்டாலும் நாளாந்தம் நாடாளுமன்றத்தின் பணியாளர்களின் பணிகளுக்கான செலவுகள் ஏற்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
