அலி சப்ரி, நீதி இல்லாத நாட்டின் நீதியமைச்சர்! நிதியில்லாத நாட்டில் நிதியமைச்சர்!
நீதி இல்லாத நாட்டில் நீதியமைச்சராகவும் நிதியில்லாத நாட்டில் நிதியமைச்சராகவும் அலி சப்ரி செயற்படுவதாக சமூக ஊடங்களில் அவர் மீது பரிகாசம் செய்யப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய ரவூப் ஹக்கீம், ஏற்கனவே எதிர்கட்சி கூறிய விடயங்களையே தற்போது அலி சப்ரி கூறுவதாக குறிப்பிட்டார்..
அவர், நாட்டின் பிரச்சினைக்கு தீர்வை அறிவிக்காமல், தொடர்ந்தும் வாக்குமூலத்தை வழங்கி வருவதாகவும் ஹக்கீம் தெரிவித்தார்.
இதேவேளை வரி மற்றும் தீர்வைகள் சம்பந்தமாக அவர் ஷேக்ஸ்பியர் நாடகத்தின் மார்க் அந்தனியின் பாத்திரத்தை ஏற்று நடத்திக்கொண்டிருக்கிறார் என்றும் ரவூப் ஹக்கீம் கூறினார்.
இதேவேளை காலிமுகத்திடலில் மேற்கொள்ளப்படும் சத்தம் கேட்காமல் எத்தனை நாட்களுக்கு பதுங்கிக்குழிக்குள் இருக்கமுடியும் என்று ஹக்கீம் கேள்வி எழுப்பினார்.