மூன்று வாரங்களில் ரணில் பதுங்கு குழிக்குள் செல்வார்! சமிந்த விஜயசிறி ஆருடம்!
ரணில் பதுங்குக்குழிக்குள்
எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு பின்னர், ரணில் விக்ரமசிங்கவும் பதுங்கிக்குழிக்குள் செல்லவேண்டியேற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி தெரிவித்துள்ளார்.
தேசிய தலைவராக கருதப்பட்டவர், கடந்த 9ஆம் திகதி சென்ற இடத்துக்கே ரணில் விக்ரமசிங்கவும் செல்வார் என்றும் சமிந்த விஜயசிறி குறிப்பிட்டார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கப்ரால் மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மேற்கொண்ட காரியத்தையே ரணில் விக்ரமசிங்க செய்து கொண்டிருப்பதாக குறி்ப்பிட்டார்.

பணம் அச்சிடும் ரணில்
அவர்கள் இருவரும் ரூபாவை அச்சிட்டதைப் போன்றே ரணில் விக்ரமசிங்கவும் பணத்தை அச்சிடப்போகிறார். எனினும் ரூபாவை அச்சிடுவதன் மூலம் நாட்டின் பிரச்சினையை தீ்ர்க்கமுடியாது என்றும் அவர் கூறினார்.
மூன்று வாரங்களுக்கு நெருக்கடி தொடரும் என்றும் அதன் பின்னர் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பதாகவும் ரணில் கூறியிருப்பதை கொண்டு நாட்டின் நிலைமையை உணரமுடிகிறது.
இந்தநிலையில் பிரசன்ன ரணதுங்க குற்றவாளி என்று நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு அன்று மத்திய வங்கியில் கொள்ளையிட்ட தலைவர் என்ற பெயர் இருந்தது என்றும் சமிந்த தெரிவித்தார்.

ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam