நாடாளுமன்றம் அருகே காணாமல் போன துப்பாக்கி மீட்டெடுப்பு
நாடாளுமன்றம் அருகே காணாமல் போன துப்பாக்கி கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் நாடாளுமன்றம் அருகே நடைபெற்ற போராட்டக்காரர்கள் மற்றும் ராணுவத்தினருக்குமிடையிலான மோதலில் ராணுவ சிப்பாய் ஒருவரின் துப்பாக்கி காணாமல்போயுள்ளது.
ராணுவ சிப்பாயை போராட்டக்காரர்கள் தாக்கியதுடன் அவரிடமிருந்த துப்பாக்கியையும், தோட்டாக்கள் அடங்கிய மகசினையும் பறித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரால் மீட்டெடுப்பு
இந்த நிலையில் காணாமல் போன துப்பாக்கியும் வெற்றுத் தோட்டா கூடும் பொல்கொட ஆற்றின் பாலத்துக்கு அடியில் இருந்து கடற்படையினரால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து மீட்கப்பட்ட டீ-56 ரக துப்பாக்கி மற்றும் வெற்று தோட்டாக் கூடு என்பன வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.