பொருளாதார நெருக்கடியினால் நாட்டை விட்டு வெளியேறும் அரசியல்வாதிகள்
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக சில அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்களை ஆதாரம்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளிநாடு செல்ல எத்தனிக்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றிற்கு மீண்டும் தெரிவாகும் சாத்தியப்பாடுகளில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையே இவ்வாறு வெளிநாடு செல்ல முயற்சிப்பதற்கான பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேற எத்தனிப்பதாக சபநாயாகர்
இதேவேளை, மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளிறேத் திட்டமிட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என நாடாளுமன்றில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டமொன்றில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜேசிறி நாடாளுமன்ற பதவி விலகியிருந்தார்
மேலும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரட்ன பதவி விலகி கனடா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
