எரிவாயு கொள்கலன் வெடிப்பு- அவசர ஆலோசனைக்குழுக் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு
எரிவாயு கொள்கலன்களின் வெடிப்புகள் தொடர்பில் ஆராயும் முகமாக நாளை முற்பகல் 9 மணிக்கு அவசர ஆலோசனை உபக்குழுக் கூட்டத்தை கூட்டுமாறு சபாநாயகர் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, எரிவாயு கொள்கலன்கள் வெடிப்பு தொடர்பில் ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவிடம் எழுப்பிய நீண்ட கேள்விகளை அடுத்தே இதற்கான யோசனை அவைத்தலைவர் தினேஸ் குணவர்த்தனவினால் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்தே சபாநாயகர், இதற்கான அழைப்பை விடுத்தார்.
இதன்போது கட்சி தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த பிரச்சனை தொடர்பில் அவசர ஆலோசனைக்குழு கூட்டத்துக்கு அப்பால் நாடாளுமன்ற செயற்குழு ஒன்றையும் அமைக்குமாறு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்



Bigg Boss: பேபின்னு சொன்ன வாயை உடைச்சிடுவேன்... இருக்கையை எட்டி உதைத்த கம்ருதின்! பாருவின் காதல் முறிவு Manithan
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan