இன்னும் திரும்பப்பெறப்படாத, பசளை இறக்குமதி தடைக்கான வர்த்தமானி - எதிர்கட்சி கேள்வி
இறக்குமதி அனுமதி வழங்கப்பட்டுள்ள, இரசாயனப் பசளைகளை, இன்னும் ஒன்றரை மாதத்துக்குள் இலங்கைக்கு இறக்குமதி செய்யமுடியுமா? என்று எதிர்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்த கேள்வியை இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பினார்.
பசளைகளை இறக்குமதி செய்யும் பணிகள் தனியார் துறையினருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளன.
எனினும் இரசாயன பசளைகளை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடைக்கான வர்த்தமானி இன்னும் திரும்பப்பெறப்படவில்லை.
இந்த வர்த்தமானி திரும்பப்பெறப்படாத நிலையில், எப்போது பசளை இறக்குமதி மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கான டொலர்களை எவ்வாறு பெற்றுக்கொள்ளமுடியும் என்பது தொடர்பிலும் தெளிவில்லை.
இதேவேளை தனியார் துறையினரால் இரசாயனப் பசளைகள் இறக்குமதி செய்யப்படுமானால், அவை விவசாயிகளுக்கு என்ன விலையில் வழங்கப்படும் என்பதை அரசாங்கம் அறிவிக்கவேண்டும் என்றும் நளின் பண்டார கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில் அரசாங்கத்தினால், இறக்குமதி செய்யப்பட்டுள்ள நனோ யூரியாவினால் உரிய பயன்களை பெற்றுக்கொள்ளமுடியாதுள்ளதாக கிளிநொச்சி போன்ற இடங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் நளின் பண்டார குறிப்பிட்டார்.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
