ஆளும் கட்சியின் ”திஸ்ஸ குட்டியாராச்சியை மனநல வைத்தியசாலைக்கு அனுப்புங்கள்”
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் மீது சபாநாயகரினால் நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து எதிர்கட்சி இன்றும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இந்த அதிருப்தியை வெளியிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினிகுமாரி விஜயரத்னவுக்கு எதிராக அண்மையில் திஸ்ஸ குட்டியராச்சி, கூறியதாக தெரிவிக்கப்படும் தகாத வார்த்தைகள் தொடர்பில் ஏற்கனவே, பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, சபாநாயகரிடம் முறையிட்டிருந்தது.
இதனையடுத்து நேற்று திஸ்ஸ குட்டியாராச்சியை, சபாநாயகர் எச்சரித்தார்.
எனினும் இந்த எச்சரிக்கைக்கு அப்பால் குட்டியராச்சி தாம் கூறிய வார்த்தைக்காக மன்னிப்புக் கோரவேண்டும் என்று தலதா அத்துகோரள இன்று கோரிக்கை விடுத்தார்.
இல்லையேல் திஸ்ஸ குட்டியராச்சியை மனநல மருத்துவமனையின் சிகிச்சைக்கு அனுப்பவேண்டும் என்று தலதா கோரிக்கை விடுத்தார்.

அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam