ரணில் சிறை செல்லவேண்டியிருக்கும் - நாடாளுமன்றத்தில் பகிரங்கம் (காணொளி)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு, சமர்ப்பித்துள்ள 21 பாிந்துரைகளையும் நாடாளுமன்றத்தில் முன்வைத்தால், அது தொடர்பில் பொதுவிவாதத்துக்கு வரமுடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொது விவாதத்துக்கு வருமாறு ராஜாங்க அமைச்சர் காஞ்சன வீரசேகர விடுத்த சவால் தொடர்பிலேயே ஹக்கீம் இந்த தமது கருத்தை வெளியிட்டுள்ளார். |
நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றின் ஊடாக இந்த அரசியலமைப்பு தயாரிக்கப்படவேண்டும் என்று எதிா்கட்சியின் பிரதம அமைப்பாளர் லச்மன் கிாியெல்ல கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அரசியலமைப்பு தொடர்பான வரைபு தயாரானதும். அது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். |
லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஈவா வணசுந்தர நியமிக்கப்பட்ட பின்னர், அரசாங்கக் கட்சியின் அரசியல்வாதிகள் 45 வழக்குகள் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்தக் குற்றச்சாட்டை இன்று நாடாளுமன்றில் சுமத்தினார்.
இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச, ஜனாதிபதிகள் தமது நெருக்கமானவர்களை ஆணைக்குழுக்களுக்கு நியமிக்கமுடியும் முன்னாள் ஜனாதிபதி ஜேஆர் ஜெயவா்த்தன, இவ்வாறான நியமனங்களை மேற்கொண்டபோதும், அவருக்கு தேவையான வகையில் முடிவுகளை ஆணைக்குழுக்களின் தலைவர்கள் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார். |
1979 ஆம் ஆண்டுகளில் இருந்து நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் காரணமாக சுயாதீன ஆணைக்குழுக்கள் உாியமுறையில் செயற்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹா்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.
எனவே இந்த நிலைமையில் மாற்றம் தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். |
இன்றைய பிரதமரும் அன்றைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் வடக்கு கிழக்குக்கு பகுதிகளில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் வடக்கின் மாகாணசபை ஒதுக்கப்பட்ட நிதியை உாியமுறையில் பயன்படுத்தவில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா குற்றம் சுமத்தியுள்ளார் |
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது தாம் முறைப்பாடு செய்தால், அவர் சிறை செல்லவேண்டியேற்படும் என்று அமைச்சா் மஹிந்தாநந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
தம்மை கொலை செய்யவேண்டும் என்று ரஞ்சன் ராமநாயக்க, ரணி்ல் விக்கிரமசிங்கவுக்கு தொலைபேசியின் மூலம் கூறியதாக கூறப்படுவது தொடர்பிலேயே மஹிந்தாநந்த இதனை குறிப்பிட்டார்
எனினும் தாம் பழிவாங்கல் அரசியல் செய்யப்போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார் |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 11 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
