சுகாதார பணிப்பாளரின் உத்தரவை மீறி நடத்தப்பட்ட "மஹிந்த ராஜபக்ச"கிண்ணக் கால்பந்து போட்டி
மஹிந்த ராஜபக்ச கிண்ண கால்பந்து இறுதிப்போட்டி கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றபோது பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த கேள்வியை எழுப்பினார்.
சுகாதார பணிப்பாளர் அண்மையில் வெளியி்ட்ட சுற்றறிக்கையில் விளையாட்டு நிகழ்வுகளின்போது பார்வையாளர்கள் அனுமதிக்கப்படக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
இதன்படி காலியில் நடைபெறும் மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இருந்தபோதும் மஹிந்த ராஜபக்ச கிண்ணக் கால்பந்தாட்ட போட்டியின்போது எவ்வாறு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
எனினும் இந்த கேள்விக்கு ஆளும் தரப்பில் இருந்து பதில் வழங்கப்படவில்லை.





திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
