நாடாளுமன்றத்தில் இன்று மாலை வாக்கெடுப்பு!
2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு விவாதத்தின் வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இன்று நாடாளுமன்ற அமா்வுகளில் அனைவரும் பங்கேற்கவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளார்கள். எதிர்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இன்று மன்றில் சமுகமளிப்பர் என்று எதிா்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் பாதீட்டின் குழுநிலை விவாதம் நாளை 23ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது.
இதனைடுத்து பாதீட்டின் இறுதி வாக்கெடுப்பு 2021 டிசம்பா் 10ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ளது.
இதேவேளை மாற்று வழியில்லாமை காரணமாக தாம் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அரசியலமைப்பின் 20ஆம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினா்கள் பாதீட்டுக்கும் ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்கப்படுகிறது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri