இலங்கையின் வடக்கில் குடியிருப்புகள் காடுகளாக்கப்படுவதால் சந்தேகம்
காடுகள் பாதுகாக்கப்படவேண்டும். எனினும் குடியிருப்பு பகுதிகள் காடுகளாக அறிவிக்கப்படக்கூடாது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இந்த கோரிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் விடுத்தார்
குடியிருப்பு பகுதிகள் காடுகளாக்கப்பட்டு அந்த பிரதேசங்கள் பின்னர்,வடக்கின் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்
வவுனியா நெடுங்கேணியில் இது போன்ற குடிப்பரம்பலை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சித்தார்த்தன் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை அம்பாறை வட்டமடு பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவும் காணிப்பிரச்சனை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால், அது தொடர்பில் கவனமான அனுகுமுறை தேவை என்று ராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த இடத்தை தமிழ் மக்கள் மேய்ச்சல் நிலம் என்று கூறுகின்ற நிலையில் முஸ்லிம் மக்கள் வயல் நிலம் என்று கூறுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam