நாடாளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை (live)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது நாடாளுமன்றில் விசேட உரையை ஆற்றுகின்றார்.
சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை, கடன் மறுசீரமைப்பு விடயங்கள் தொடர்பாக அவரது உரை அமைந்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் மகிந்த யாப்பா தலமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை குறித்து இன்றைய தினம் (26.04.2023) விவாதிக்கப்படவுள்ளது.
முதலாம் இணைப்பு
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை குறித்து இன்று நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி
இந்த விவாதம் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களுக்கு இந்த விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கை 2.9 பில்லியன் டொலர் கடனுதவி குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.