சிக்கலுக்கு உள்ளாகியுள்ள நாடாளுமன்றம்: பெரும்பான்மை தொடர்பில் நிச்சயமற்ற நிலை
நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவி வருவதால், நாடாளுமன்ற விவகாரங்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையின் அடிப்படையில் எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு கோரக்கூடிய வரைவு சட்டமூலங்கள் மீதான விவாதத்தை ஒத்திவைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த வாரமும் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கக்கூடிய சட்டமூலங்கள் மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் பெரும்பான்மை
இந்நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவொன்று தனி வேட்பாளருக்கு ஆதரவளித்ததாலும், மேலும் இரு அமைச்சர்களின் ஆசனங்களை இழந்ததாலும் அரசாங்கத்தின் பெரும்பான்மை தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் எம்.பி.க்கள் அனைவரையும் தக்கவைத்துக் கொள்ள முடியாத நடைமுறை அசெளகரியம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளை அவர்களது கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய தேவையினால் இது அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
