2.5 அமெரிக்க டொலரை மீள செலுத்த நாடாளுமன்ற அங்கீகாரம் தேவை: பிரிலோயர் அமைப்பின் ரஞ்சித் கீர்த்தி
வெளிநாட்டில் பெற்றுக் கொண்ட கடனுக்காக செலுத்தப்பட்டு மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்குப் பதிலாக அவுஸ்திரேலிய ஏற்றுமதி நிதி நிறுவனத்திற்கு (Export Finance Australia) அந்தத் தொகையை மீண்டும் செலுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி அவசியம்.
நாடாளுமன்றத்தில் குறைநிரப்பு பிரேரணையொன்றை சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்று நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கும் என முன்னாள் மாகாண ஆளுரும் பிரிலோயர் அமைப்பின் உறுப்பினரான ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்திருந்தார்.தொடர்ந்து பேசிய அவர், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டுக் கடனுக்கான வட்டித் தவணையாகச் செலுத்துவதற்காக இந்த 2.5 மில்லியன் டொலர் அங்கீகரிக்கப்பட்டது.
கோட்டாபயவின் ஊழலை தொடர்ந்து முன்னெடுக்கும் அரசு: வெளிநாட்டிலிருந்து கசிந்திருக்கும் பயங்கர தகவல்கள்!
நாடாளுமன்றத்தின் அங்கீகாரம்
இருப்பினும் அடையாளம் காணப்படாத தரப்பு ஒன்றிற்கு இந்த நிதி சென்றுள்ளதாலும் அதனை இதுவரை மீட்க முடியாமல் போனதாலும் புதிய நிதி ஒதுக்கீடு அவசியமாகியுள்ளது.
மத்திய வங்கியிடமிருந்த அரச கடன் முகாமைத்துவ பணிகள் நிதி அமைச்சின் கீழ் புதிதாக நிறுவப்பட்ட அரச கடன் கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கு மாற்றப்பட்ட இடைக்காலத்திலேயே இந்தத் தவறு நடந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பொது நிதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 8-வது பிரிவின் கீழ் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்காணிக்க மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அத்தகைய குழுவின் மூலம் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதற்கான எந்தவொரு அறிக்கையும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் அரச கடன் முகாமைத்துவ திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் ஆகியவை குறித்த அவுஸ்திரேலிய ஏற்றுமதி நிதி நிறுவனத்துடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி விருது பெற்ற நாகொடிக் அதிகாரிகள் போதை பொருள் கடத்தினர்: மைத்திரி சொன்ன திடுக்கிடும் தகவல்கள்…