பாதாள உலக நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்த நாடாளுமன்றக்குழு
பாதாள உலக நடவடிக்கைகள் முதன்மையாக போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவை என்று பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்,
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்,
வெளிநாடுகளில் இருந்து இந்த நடவடிக்கைகளை இயக்கும் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்து அவர்களை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் நடந்து வருவதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு கோரிக்கை
இந்தநிலையில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பை அதிகரிப்பதற்கான கோரிக்கை குறித்தும், இதன்போது குழு விவாதித்துள்ளது.
எனினும் சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.
மதிப்பீட்டு அறிக்கைகள் முடிந்ததும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ 100 கோடி சம்பளம்... எதையும் செய்யவில்லை: இந்தியரை வேலையைவிட்டு நீக்கியதன் காரணம் கூறிய மஸ்க் News Lankasri

உக்ரைன் தொடர்பில் ஐரோப்பாவின் இரட்டை நிலை... ரஷ்யாவுக்கு கொட்டிக்கொடுத்த பல பில்லியன் தொகை News Lankasri
