சஜித்தை புறந்தள்ளி ரணிலுடன் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) தவிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியுடன், ஏராளமான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டணி அமைப்பார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை
இந்தநிலையில், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரை கைவிட்டு கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது" என்று சேனாரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
எனினும், இதற்கு பதிலளிக்கும் விதமாக, கருத்துரைத்துள்ள, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரேமதாச ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுவார்த்தையை நிறுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan

முகேஷ் அம்பானியின் வீட்டு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்! ஆன்டிலியாவில் எப்படி வேலைக்கு சேர்வது? News Lankasri
