இலங்கை வந்த பிரித்தானியா பெண்ணுக்கு நேர்ந்த கதி
வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்த முயன்றதாக கூறப்படும் 2 இளைஞர்களை கல்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்பிட்டி மண்டலகுடாவ பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய 2 சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
58 வயதுடைய பிரித்தானிய பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். அவர் கடந்த 15 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார்.
வெளிநாட்டு பெண்
நாட்டிற்கு வந்த வெளிநாட்டு பெண்ணும் அவரது கணவரும் கல்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.
குறித்த வெளிநாட்டுப் பெண் நேற்று முச்சக்கர வண்டியில் பயணித்தபோது, தன்னை நோக்கி வந்த இரண்டு இளைஞர்களுடன் செல்பி எடுக்க கேட்டுக்கொண்டுள்ளனர்.
செல்பி எடுப்பதாக கூறி 2 இளைஞர்கள் தன்னை தகாத முறைக்கு உட்படுத்தியதாக வெளிநாட்டுப் பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் 2 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு, கல்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இவ்வளவு சீக்கிரம் முடியுமென கனவிலும் நினைக்கவில்லை: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாளின் பதிவு News Lankasri

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan
