கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து வெளியான தகவல்
கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு, பாதாள உலகக்குழுவின் தலைவர் ஒருவர் 15 மில்லியன் ரூபா பணம் வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவருக்கு 200,000 ரூபா பணம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுவாக கைது செய்யப்பட்ட இது போன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் பெரும்பாலானோருக்கு கொலையின் பின் வாக்குறுதியளித்த பணத்தை ஒப்பந்தக்கார்கள் வழங்குவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறையில் கழிக்க வேண்டிய நிலை
எனவே பொய்யான வாக்குறுதிகளால் கவரப்பட்டு பாரிய குற்றங்களில் ஈடுபடுகின்றவர்கள், இறுதியில் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் கணேமுல்ல சஞ்சீவவின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பேஸ்புக் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டார் என்பதையும் பேச்சாளர் வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |