ரணில், மைத்திரி ஏன் நாடாளுமன்றத்திற்கு வந்தீர்கள்...! சாமர சம்பத் பகிரங்க கேள்வி (VIDEO)
பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தாம் மூன்று மாதங்களுக்கு நாடாளுமன்றத்தில் இருக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
எனக்கு ஆங்கிலம் தெரியாது, என்னால் நாட்டை கட்டியெழுப்பவும் முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஒரு ஆசனத்தை பெற்று ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வந்தால் நாட்டை சரிப்படுத்துங்கள்.
ஒரு ஆசனம் இருந்தால் ஏன் நாடாளுமன்றத்திற்கு வந்தீர்கள். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறினே ஏன் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்தார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,