நிதி அமைச்சரை சபைக்கு வருமாறு ஆணையிடுங்கள்! சபாநாயகரிடம் எதிரணி வேண்டுகோள்
நிதி அமைச்சரை சபைக்கு வரச் சொல்லுங்கள், இல்லையென்றால் சபாநாயகர் நிதி அமைச்சருக்குக் கட்டளை அனுப்புங்கள் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணியளவில் கூடியது.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி,
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சபைக்கு வருவது இல்லை. அவர்தான் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், அவருக்குப் பதிலாக வேறு உறுப்பினர்கள் பதில் கூறி வருகின்றனர்.
நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. டிசம்பர் 10ஆம் திகதியே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சபையில் உரையாற்றினார்.
அதன்பின்னர் நாட்டின் நிதி நிலவரம் தொடர்பில் கடந்த மூன்று மாதங்களாக நிதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு தெளிவுபடுத்தவில்லை.
எனவே, நாடாளுமன்றம் வந்து தெளிவுபடுத்துமாறு, நிதி அமைச்சருக்கு சபாநாயகர்
உத்தரவிட வேண்டும் என இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri