உடனடி தீர்வு வேண்டும் : நிபந்தனை அடிப்படையில் எந்தவொரு கலந்துரையாடலுக்கும் தயார் - அநுர குமார
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் மற்றும் பொதுமக்களின் பொருளாதார பிரச்சினைக்கு உடனடி தீர்வு வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையிலே எந்தவொரு கலந்துரையாடலுக்கும் தம்மால் முன்வர முடியும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று இதனை தெரிவித்தார்.
நாட்டின் மக்கள் இன்று அரசாங்கம் முன்கொண்டு வந்துள்ள அமைச்சர்களின் பதவி விலகல், இடைக்கால நிர்வாகம் போன்ற நாடகங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
எனவேதான் அவர்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்திகொண்டிருக்கின்றார்கள். எனவே பொதுமக்களின் கோரிக்கைகளான கோட்டாபய வீட்டுக்கு செல்ல வேண்டும், மக்களின் அன்றாட பிரச்சினை தீர்க்கபடவேண்டும் என்பதே தம்முடைய கோரிக்கை ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த பிரச்சினைகளுக்கு அரசியல் அமைப்புக்கு அப்பாற்பட்டு தீர்வு முன்வைக்கப்படலாம் என்றும் அநுரகுமார குறிப்பிட்டார்.