ஈரானுடன் சந்திப்பு நடத்துவது பற்றித் தனக்கு எந்த அக்கறையும் இல்லை: ட்ரம்பின் அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணையின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்காக வளைகுடா நாடுகள் நாளை(13) ஈரானுடன் சந்திப்பு நடத்துவது பற்றித் தனக்கு எந்த அக்கறையும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து குடியரசில் உள்ள டூன்பெக் நகரில் அமைந்துள்ள தனது கோல்ஃப் ஓய்வு விடுதியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானிய சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அந்த நாடுகளின் தனிப்பட்ட விருப்பம் எனச் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவுடன் ஒப்பந்தம்
ஈரான் அரசாங்கம் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள மிகவும் தீவிரமாக விரும்புவதாகத் தனது பழைய கூற்றை ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு முன்னரோ அல்லது அதற்கு உடனடியாவோ இந்தப் போர் முடிவுக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.