நாடாளுமன்றில் குழப்பம்! 10 நிமிடங்களுக்கு அமர்வு ஒத்திவைப்பு!
நாடாளுமன்றில் இன்று குழப்ப நிலை உருவானது.
இதனையடுத்து நாடாளுமன்றத்தை சபைக்கு தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அமர்வை 10 நிமிடத்துக்கு ஒத்திவைத்தார்.
அமர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் சபைக்குள் வந்த ஐக்கிய மக்கள் சக்தியினர் கோசங்களை எழுப்பினர்
சபாநாயகர் இந்த இடத்துக்கு வராவிட்டால், அவரை வீட்டுக்காவலில் வைக்கவுள்ளதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
சபாநாயகரை இன்று வீட்டுக்கு அனுப்பப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அ்த்துடன் போராட்டக்காரர்களை நாடாளுமன்றுக்குள் அழைத்து வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் தாம் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு திகதியை ஒதுக்குமாறும் ஐக்கிய மக்கள் சக்தியினர் இதன்போது கோரினர்
இந்தநிலையில் நிலைமையை கருத்திற்கொண்டு அமர்வுகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக ஹேஷா விதானகே அறிவித்தார்.



