தமிழக முதல்வரிடம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் தமிழக முதல்வரின் பங்கு அளப்பரியதாக இருக்கவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரியுள்ளது.
இலங்கைக்கு தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையை கருத்திற்கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் உணவுகளை வழங்க முன்வந்துள்ளார்.
இந்தநிலையில் அதற்கு அப்பால் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கும் தமிழக முதல்வரின் பங்கு இருக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 3000ஆயிரம் மில்லியன் டொலர்களை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது.
அத்துடன் 4 லட்சம் தொன் எரிபொருளை இந்தியா, இலங்கைக்கு வழங்கியுள்ளது என்றும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.



