இன்றைய நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம் (Live)
நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் (24.05.2023) காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி காலை 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.00 மணி வரை, 2002 ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 7ஆம் பிரிவின்படி தற்போதைய தலைவர் மற்றும் உறுப்பினர் ஜே.டபிள்யு.எம்.ஜே.பி.கே. ரத்நாயக்கவை அந்த உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கான உரை நிறைவேற்றப்படவுள்ளது.
மேலும், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் விசேடமாக நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
