போராட்டகாரர்கள் மத்தியில் சிக்கிய ஹரின் மற்றும் மனுஷ நாணயக்கார
நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதியை மறித்து எதிர்ப்பில் ஈடுபட்ட போராட்டகாரர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை கடந்து செல்ல விடாமல் தடையேற்படுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வாகனத்தில் இருந்து இறங்கி வந்தனர். எனினும் அதனை போராட்டகாரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, ஹெக்டர் ஹப்புஹாமி ஆகியோரே இந்த சிக்கலான நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு செல்லும் வழியை மறித்து போராட்டகாரர்கள் காத்திருந்ததுடன் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறும் அனைத்து வாகனங்களையும் அவர்கள் கண்காணித்துள்ளனர்.
எவ்வாறாயினும் பொலிஸார் தலையீடுகளை மேற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடையை கடந்து செல்ல வழியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர்.