கோட்டாபய கடற்படை முகாம் தொடர்பில் அம்பலமாகும் உண்மைகள் (Video)
கோட்டாபய கடற்படை முகாமினால் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கையகப்படுத்தப்பட்டுள்ள நிலம்
கோட்டாபய கடற்படை முகாம் 2009ஆம் ஆண்டு பின்னர் உருவாக்கப்பட்டது. கோட்டாபய கடற்படை முகாமில் மொத்தமாக 671 ஏக்கர் நிலங்கள் உள்ளது.
அதில் தனியார் நில காணிகள் 378 ஏக்கர் எல்.டி.ஓ போமிட் காணிகள் 50 ஏக்கர் அரச காணிகள் 243 ஏக்கருமாக மொத்தம் 671 ஏக்கர் நிலங்களை கடற்படை தம் வசம் வைத்துள்ளது.
இந்நிலையில், தனியார் காணிகளையும், எல்.டி.ஓ போமிட் காணிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி மக்கள் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தபோதும், எந்தவிதமான பலனும் கிட்டவில்லை.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட நிலஅளவை திணைக்களத்தின் ஊடாக அந்த நிலஅளவைகளை மேற்கொள்ள முயற்சித்த போது மக்களினதும், அரசியல்வாதிகளினதும் எதிர்ப்பினை அடுத்து கைவிடப்பட்டது.
ஆனால் தற்போது கொழும்பில் இருந்து நிலஅளவை திணைக்களத்தின் ஊடாக அந்த நிலங்களை அளவீடு செய்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடிதம் மூலம் கோரிக்கை
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தாம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் இங்கு குறிப்பி்ட்டுள்ளார்.
இன்றைய உலக ஒழுங்கை டொனால்ட் ட்ரம்பால் மாற்ற முடியுமா..! 29 நிமிடங்கள் முன்
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam