மே மாதத்தில் கலைக்கப்படுமா நாடாளுமன்றம்..! ஜி.எல். பீரிஸ் வெளியிட்டுள்ள தகவல்
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனில் இந்த வருடம் மே மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (12.03.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“இவ்வருடம் ஜீலை மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு விடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பாதீட்டு நிதி
எனினும், தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துவது குறித்து விவாதிக்கப்படுவதால் மே 13ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு குறித்த திகதிக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படவில்லை என்றால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தலை நடாத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.
மேலும், பாதீட்டில் 10 மில்லியன் ரூபா நிதி ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த வருடம் தேர்தலை நடாத்த நிதி இல்லை என அரசாங்கத்தால் கூற முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |