ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜினாமா
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட சற்று முன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அவர் பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் நாடாளுமன்றத்திற்கு பசில் ராஜபக்ச வரவுள்ளதால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக ஊடகமொன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பஸில் ராஜபக்சவுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவியுடன் நிதி இராஜாங்க அமைச்சு பதவியே வழங்கப்படவுள்ளது என முன்னதாக தகவல் வெளியாகியிருந்தாலும், நிதி அமைச்சையும் அவருக்கு முழுமையாக வழங்குவதற்கு பிரதமர் இணக்கம் வெளியிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
இதன்படி நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவே பஸில் ராஜபக்ச பதவியேற்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.