அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை! சபாநாயகரிடம் கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடிவரவு, குடியகல்வு சட்டங்களை மீறி, சட்டவிரோதமாக தங்கம் மற்றும் கைத் தொலைபேசிகளை நாட்டுக்குள் கடத்தி வந்ததாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை எழுத்து வடிவில் சபாநாயகரிடம் முன் வைத்துள்ளார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்து அலி சப்ரி ரஹீம் மீண்டும் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடும் என்பதன் காரணமாக உடனடியாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு குறித்த எழுத்து மூல கோரிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam