நாடாளுமன்றில் அரசாங்கத்தை கடுமையாக சாடிய கபீர் ஹாசிம் எம்.பி
அனர்த்தம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்தல் விடுத்துள்ள நிலைமையில் அரசாங்கம் நாடாளுமன்றில் இது தொடர்பில் எவ்வித திட்டங்களும் மேற்கொள்ளாமையே பாரிய அழிவுகளுக்கு காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றம்சாட்டியுள்ளார்.
'டிட்வா' புயலின் கோரதாண்டவத்தின் பின்னர் இன்று (01.12.2025) நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அப்போது எதிர்க்கட்சியின் உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அனர்த்த முன்னாயத்தம்
தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் கடந்த 12 ஆம் திகதி முன்னறிவித்தல் விடுத்துள்ளது.
இருப்பினும் அனர்த்தங்கள் தொடர்பில் அரசாங்கம் நாடாளுமன்றில் இது தொடர்பில் எவ்வித திட்டங்களும் மேற்கொள்ளாமையே பாரிய அழிவுகளுக்கு காரணமானது.
அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் முன்னாயத்த நடவடிக்கைகள் எடுப்பது சாதாரண நிகழ்வாகும்.ஆனால் அரசாங்கம் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவில்லை.
நீர்ப்பாசன திணைக்களமும் இது தொடர்பில் அவதான அறிவிப்பை விடுத்துள்ளது.அதன் ஒரு நடவடிக்கையாக அணைக்கட்டுகளின் நீரை திறந்து விட்டிருந்திருந்தால் மரணங்களின் எண்ணிக்கையை குறைத்திருக்கலாம்.
கொத்மலை அணைக்கட்டின் வான் கதவுகள் உடன் திறந்து விட்டதாலே கம்பளை நகரம் முழுமையாக நீரில் மூழ்கியது.
இதில் 1000ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம்.கடைசிவரை நீர் நிலைகளின் நீர் திறந்து விடவில்லை.அவ்வாறு செய்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்றார்.