கோட்டாபய பதவி விலகும் வரை காத்திருப்பது அபத்தமானது! நாட்டை விட்டு ஓடிய துனிசிய ஜனாதிபதியை மேற்கோள்காட்டி தகவல்
ஜனாதிபதி தனது பொறுப்பை மீறி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால், அவர் பதவி விலகுவதற்காக காத்திருப்பது அபத்தமானது என்றும் அரசியலமைப்பின் பிரகாரம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான உரிமை நாடாளுமன்றத்திற்கு உள்ளதாக ஜனதா விமுக்தி பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலே அவர் இதனை தெரிவித்தார்.
“ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிக்கவில்லையென்றால், அது பதவியை விலகியதாக எண்ண முடியும்.
நாட்டை விட்டு ஓடிய கோட்டாபய

துனிசிய ஜனாதிபதி பென் அலி தனது பதவி விலகலை அறிவிக்காமல் நாட்டை விட்டு ஓடிய அதேபோன்ற சம்பவம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பின் சரத்து 38(2) இன் விதிமுறைகளுக்கு அமைய, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு சபாநாயகரும், பிரதம நீதியரசரும், நாடாளுமன்றத்தின் ஊடாக தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நாட்டை ஸ்திரப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வர ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் பதவி விலக வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.”
| கோட்டாபயவின் இறுதி முடிவு என்ன... சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் |
May you like this video