14 மாதங்களில் நாடாளுமன்றில் நிறைவேற்றிய சட்டங்கள் தொடர்பில் ரணில் விளக்கம்
நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு வசதியாக கடந்த 14 மாதங்களில் நாடாளுமன்றம் 42 புதிய சட்டங்களை இயற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளம் சட்ட வல்லுனர்களுடன் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பான உரையாடலின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம்
அவர் மேலும் கூறியதாவது,
"இந்த நிலையில் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதை நிறைவேற்ற முடியாவிட்டால், அடுத்த கூட்டத்தொடரில் யோசனைகள் ஒப்புதலுக்காக மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.
1977 ஆம் ஆண்டு முன்கொண்டு வரப்பட்ட ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் திறந்த பொருளாதாரத்திற்கு வசதியாக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்து முக்கியமானவதாகும்.

நாட்டின் விரைவான பொருளாதார மாற்றத்திற்கு அத்தகைய சட்டம் மிகவும் முக்கியமானது. அத்துடன் கல்வித்துறையிலும் பல புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தபடவுள்ளன.
இந்தச் சட்டமியற்றும் முயற்சிகளைத் தடுக்கும் முயற்சிகள் இருந்தன எனினும்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டவுடன் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவற்றை யாரும் செல்லாததாக்கவோ அல்லது மறைமுகமாகத் தடுக்கவோ முடியாது.

1972 அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி இறுதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்குள் மட்டுமே உள்ளது.
இந்தச் செயற்பாடுகளை மனித உரிமை மீறல்கள் என முத்திரை குத்துவதற்கு சிலர் முனைகின்றனர். எனினும் முதன்மையான மனித உரிமை நாட்டு மக்களின் வாழ்வதற்கான உரிமை, இரண்டாவதாக இளைஞர்களுக்கு நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை ஏற்படுத்துவது ஆகும்.
கடனை நீண்டகாலமாக நம்பியிருந்தமையே பொருளாதார வீழ்ச்சிக்கு பிரச்சினைக்கான காரணம்.

இந்தக் கடனைத் திறம்பட நிர்வகிக்கத் தவறியதால், வருமானம் இல்லாததால், நிதிக் கடமைகளைச் சமாளிக்க முடியாமல் போனதால், நாடு வீழ்ச்சி கண்டது "என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan