பொதுத்தேர்தலை குறி வைத்து கொழும்பில் பெருந்தொகையான வேட்பாளர்கள்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் அதிகளவான வேட்பாளர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் 18 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 966 பேர் போட்டியிடுவதாக தெரியவந்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 567 வேட்பாளர்களும், சுயேச்சை குழுக்களைச் சேர்ந்த 399 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
பொதுத் தேர்தல்
கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1,765,351 ஆகும்.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 19 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 902 பேர் போட்டியிடுகின்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த 528 வேட்பாளர்களும், சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 374 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
கம்பஹா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1,881,129 ஆகும். பொதுத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.