மூன்று புதிய தூதுவர்களின் நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான குழு அனுமதி
மூன்று புதிய தூதுவர்களை நியமிக்க உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, லெபனான் குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவராக கபில சுசந்த ஜயவீரவை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பஹ்ரைன் இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவராக விஜேரத்ன மெண்டிஸை நியமிப்பதற்கும் உயர் பதவிகளுக்கான குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வழங்கப்பட்ட நியமனங்கள்
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு, எத்தியோப்பியா கூட்டாட்சிக்கான இலங்கையின் தூதுவராகவும், ஆபிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் கே.கே.தெஷாந்த குமாரசிறியை நியமிப்பதற்கும் அனுமதி வழங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் நியமனங்களை உறுதிப்படுத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri