பிரான்ஸில் அரசாங்கத்திற்கெதிராக வெடித்துள்ள போராட்டம்! மூடப்பட்டுள்ள ஈபிள் கோபுரம்..
பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் பிரான்சில் பழைய செலவை குறைக்கும் திட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெறும் போராட்டம் காணமாக, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
200ற்கும் மேற்பட்ட நகரங்களிலும் கிராமங்களிலும் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்த போராட்டம்
பணியாளர்கள், ஓய்வு பெற்றவர்கள், மாணவர்கள் என பலர் Place d'Italie பகுதியில் இருந்து பேரணியை தொடங்கினர்.
பிரான்சின் முக்கிய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைத்த இந்த நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம், கடந்த மாதம் தொடங்க அரசியல் குழப்பம் மற்றும் வரவுசெலவு திட்ட விவாதங்களை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது.
"ஒரு அரசாங்கம் இல்லாமல், வரவு செலவு திட்டங்கள் இல்லாமல், ஒரே மாதத்தில் 3 நாட்கள் வேலைநிறுத்த போராட்டங்கள் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இது சமூக கோபத்தின் அளவை காட்டுகிறது" என CGT தொழிற்சங்க தலைவர் சோபி பினெட் தெரிவித்துள்ளார்.
85,000 பேர் போராட்டத்தில்
புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sebastien Lecornu), முன்னாள் பிரதமரின் திட்டங்களை தொடரவுள்ளதாக கூறிய நிலையில், சமூக நல உதவிகளை முடக்கும் மற்றும் செலவை குறைக்கும் சிக்கனமான திட்டங்களை கைவிடுமாறு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
மேலும், செல்வந்தர்களுக்கு அதிக வரிகளை விதிக்கவேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
நேற்று மதிய நேரத்திற்குள் 85,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக, பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த போராட்டங்கள், பிரான்சின் அரசியல் நிலைமை மற்றும் பொருளாதார எதிர்பார்ப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



