க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறுவது தொடர்பில் பெற்றோர்களின் மகிழ்ச்சியான கருத்து(Video)
மாணவர்களின் வாழ்க்கையில் முதலாவது தடை தாண்டல் இந்த க.பொ.த சாதாரண தரமாகும் இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகின்றது என க.பொ.த சாதாரணதர பரீட்சை தோற்றவிருக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல விடயங்கள் காரணமாக நாடு பாரிய பின்னடைவை சந்தித்திருந்த நிலையில் ஆறு மாதம் கால தாமதத்தின் பின்னர் மாணவர்களுக்கு பரீட்சை எழுதுவதற்கான சூழலினை உருவாக்கியத்தற்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்ததுடன் வரவேற்கிறோம் என பரீட்ச்சார்த்திகளின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த பரீட்சையினை நல்ல முறையில் நடத்துவதற்கு அரசாங்கமும் அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும்.
பலத்த பாதுகாப்பு செயற்றிட்டங்கள்
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த சாதாரணதர பரீட்சை இன்று (29.05.2023) 3568 மத்திய நிலையங்களில் காலை ஆரம்பமானது.
குறித்த பரீட்சைக்கு நாடாளவிய ரீதியில் சுமார் 4 லட்சத்து 72 ஆயிரத்து 553 பேர் தோற்றியுள்ளனர்.
இன்றைய தினம் ஆரம்பமான பரீட்சைக்கு மலையக பகுதிகளில் மாணவர்கள் மிகவும் ஆர்வமாகவும் நேர காலத்தோடும் பரீட்சைக்கு தோற்றியதனை காணக்கூடியதாக இருந்ததுடன் பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளை ஆர்வத்துடன் அழைத்து வருவதனை காணக்கூடியதாக இருக்கின்றது.
சகல பரீட்சை நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததுடன் பரீட்சைக்கு தேவையான சகல ஆயத்தங்களும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
