முல்லைத்தீவில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் (Photos)
முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (22.11.2023) மாவீரர் பணிக்குழு தமிழ்த்தேசிய சமூக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஞானதாஸ் யூட்சன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
நினைவு உரைகள்
இதன் போது நிகழ்வின் இறுதியில் மாவீரர்கள் இந்த மண்ணிற்கு ஆற்றிய உயிர்த்தியாகம் தொடர்பான நினைவு உரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான உலருணுவு பொருட்களும், தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தபிசாளர்களான க.விஜிந்தன், க.தவராசா , தாய் தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் போராளியுமான ரூபன் மற்றும் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மாவீரர்கள் நினைவு பலகை திறந்துவைப்பு
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் 25ஆயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுப்பலகை இன்று (22.11.23) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் வீரச்சாவடைந்த ஆண்டுகள் இதில் பொறிக்கப்பட்டுள்ளதுடன் இது எதிர்வரும் 27ஆம் திகதி வரை மக்களுக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி-கீதன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









