பெண்ணொருவரை தகாத உறவுக்கு அழைத்த பொலிஸ் பரிசோதகர் கைது
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பெண்ணொருவரிடம் இலஞ்சமாக தகாத உறவு கோரியது தொடர்பில் அவர் இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று(22.11.2023) பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்வதற்கு வருகைதந்துள்ளார்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் சிறுகுற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குறித்த பெண்ணிடம் இலஞ்சமாக தகாத உறவுக்கு அழைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இது தொடர்பில் குறித்த பெண்ணால் இலஞ்ச ஒழிப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் கல்முனை நகரில் மாறுவேடத்தில் வந்துள்ளனர்.
கொழும்புக்கு கொண்டுசெல்ல நடவடிக்கைகள்
இதனை தொடர்ந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கல்முனையில் உள்ள ஒன்றுக்கு வருமாறு கூறி பொலிஸ் உத்தியோகத்தர் அங்கு சென்று விடுதி அறைக்குள் சென்றபோது குறித்த பெண் மலசல கூடத்திற்குள் இருந்து இலஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அங்கு வந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைதுசெய்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.
அங்கு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து நீதிமன்ற கட்டளையைப்பெற்று கொழும்புக்கு கொண்டுசெல்ல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |