திருகோணமலை பாரதி தமிழ் வித்தியாலயத்தில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
திருகோணமலை வலயக் கல்வி அலுவலக எல்லைக்குட்பட்ட பாரதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த பாடசாலையில் கடமையாற்றும் ஆரம்பக் கல்வி ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (30.01.2026) இந்தப் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பாடசாலையில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வரும் குறித்த ஆசிரியரது முயற்சியால் தமது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போராட்டம்
இந்தநிலையிலே, அவ்வாறானதொரு ஆசிரியரை இடமாற்றம் செய்வது அந்தப் பகுதி மாணவர்களது கல்வி எதிர்காலத்தினை பாதிக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பிடம் தெரிவிக்கப்பட்ட போதிலும் தமக்கு சாதகமான முடிவு எட்டப்படவில்லை எனவும், பிறிதொரு நியமனத்தின் ஊடாக ஆசிரியர் தமது பாடசாலைக்கு நியமிக்கப்பட கால தாமதம் ஏற்படுவதனால் மாணவர்களது கல்வியானது கேள்விக்குறியாக மாறிவிடும் எனவும் தெரிவித்தனர்.



சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri