வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கை (Photos)
தமக்கான நீதியை வழழ்குமாறு திருகோணமலை மற்றும் வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தினர் கோரிக் விடுத்துள்ளனர்.
திருகோணமலை கப்பல்துறை பகுதியில் நேற்றைய தினம் (21.03.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இது குறித்து அந்த சங்கத்தின் தலைவி செபஸ்தியாம் பிள்ளை தேவி கூறியுள்ளதாவது, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 52ஆவது ஐநாவின் கூட்டத் தொடரில் எம்மால் பங்கேற்க முடியாமல் போனதையிட்டு மிகுந்த வருத்தம் அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

பயணச் சீட்டுகளின் விலைகள்
அத்துடன், ஒவ்வொரு முறையும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பில் யாரேனும் ஒருவர் பங்கேற்பதாகவும் இம்முறை பொருளாதார நெருக்கடி காரணமாகப் பயணச் சீட்டுகள் அனைத்தினதும் விலைகள் எதிர்பாராதவிதமாக அதிகரித்ததன் காரணமாக எம்மால் அங்கு நேரில் சென்று பங்கேற்க முடியாது போய் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 150க்கும் மேற்பட்டவர்கள் தனது பிள்ளைகளையும், கணவரையும் இழந்து அவர்கள் வந்து சேருவார்கள் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புகளுடன் இருந்தவர்கள் உயிரிழந்திருக்கின்றார்கள்.
ஆகவே நாங்களும் இறப்பதற்கு முன்னர் எமது பிள்ளைகளைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிதி தேவை இல்லை- நீதியே தேவை
அத்துடன் தமக்கு நிதி தேவை இல்லை- நீதியே தேவை என அவ்வமைப்பின் செயலாளர் செல்வராசா கைரலி கூறியுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், எட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து உறவுகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
உலக நாடுகளே எமக்காக வேண்டி குரல் கொடுக்க வேண்டும். ஐநா சபை கூட்டத் தொடரின் போது எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற விடயம் பேசப்பட வேண்டும் எனவும் இம்முறை சிறந்த தீர்வினை பெற்றுத் தர வேண்டும் எனவும் தான் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவில் போராட்டம்
வவுனியாவிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டம் இன்று (22.03.2023) முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் கொட்டகைக்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது நாம் போராட்டம் ஆரம்பிக்கும் போது அரிக்கன் விளக்குகளையே பயன்படுத்தினோம்.
எனினும் எமது போராட்ட இடத்துக்கு மின்சார சபையே மின்சாரம் வழங்கியது. தற்போது மின்சாரசபை அதனை நிறுத்தியதுடன் எமது போராட்டத்தைக் குலைக்க இந்த அரசாங்கம் அடாத்தாக, எம்மை கைது செய்தது. ஆனாலும் எமது போராட்டம் தொடரும் என்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்க உதவியைக் கோரியதுடன், இந்தியப் பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு வழங்குவதற்கும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் அமெரிக்கா, ஐரோப்பியக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.





பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியுள்ள கனி மொத்தமாக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam