ரஷ்யா - உக்ரைன் இடையிலான போருக்கு இணையான போர் நாட்டில் ஏற்படலாம்
அரசாங்கம் மேற்கொள்ளும் சில விடயங்கள் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது சிக்கலுக்குரிய நிலைமை என மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பகுதிகள் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுக்கு வழங்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். எந்த காலத்தில் நடக்காத விதத்தில் மக்கள் கடும் கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இது குறித்து சகல கட்சிகளும் கவனம் செலுத்தி செயற்படுவது முக்கியமானது. ரஷ்யா- உக்ரைன் இடையில் ஏற்பட்டுள்ள போருக்கு இணையான போர் இலங்கையில் ஏற்படலாம் என்பது தொடர்பாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன எனவும் சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தம்மை சந்தித்த போதே மாநாயக்கர் இதனை கூறியுள்ளார்.