சங்கமித்தை வரவும் இல்லை அரசமரம் நடவுமில்லை: யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டம் (Photos)
பறாளை முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்லியல் அடையாளமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தகமானிக்கு எதிராகவும் தமிழர் பகுதியில் தொல்லியற் திணைக்களத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் யாழில் பல்வேறு பகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(05.08.2023) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் உட்படப் பலர் கலந்துகெண்டனர்.
இதன்போது போராட்டக்காரர்கள் பாததைகளை ஏந்தியவாறு "சங்கமித்தை வரவுமில்லை அரச மரம் நடவுமில்லை, பொய்யான வர்த்தமானியை இரத்துச் செய், இந்த மண் எங்களின் சொந்த மண், வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், பறாளாய் முருகன் தமிழர் சொத்து, தாயகத்தில் ஆக்கிரமிப்பு சர்வகட்சி கூட்டத்தில் நல்லகணக்க நாடகம், இராணுவமே வெளியேறு" என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலதிக தகவல் கஜிந்தன்













அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
